May 23, 2024

இந்தியன் 2 இன் முதல் பாடல் வெளியானது

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி உலகெங்கும் வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

லைக்கா புரொடக்ஷனின் நிறுவுனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் பிரம்மாண்ட தயாரிப்பில், உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படம், சங்கரின் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் எதிர்வரும் ஜுலை 24 ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகலாவிய ரீதியாக வெளியாகவுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, ராகுல் பீரித்தி சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான பாரா என்ற பாடல் நேற்று வெளியாகியுள்ளது.

வித்தகக் கவிஞன் பா.விஜயின் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஸ்ருதிகா சமூத்ரலா இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் வெளியானதிலிருந்து திரையிசை ரசிகர்களின் பெரும் வரவேற்றை பெற்று வருவதோடு, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கிலும் இது தொடர்ந்தும் இருந்து வருகிறது.