October 2, 2022

ஆதவனின் 6ஆம் ஆண்டு நிறைவு

லைக்கா குழுமத்தின் ஒரு அங்கமான ஆதவன் ஊடக வலையமைப்பின் – (Lyca Media) ஆதவன் வானொலி, 6 வருட நிறைவை இன்று மிகவும் விமரிசையாக கொண்டாடுகிறது.

பிரித்தானியாவில் DAB என்ற டெஜிற்றல் தொழில் நுட்பத்தின் ஊடாக ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் வானொலியாக லைக்காவின் ஆதவன் வானொலி நிலைபெற்றுள்ளது.

ஐரோப்பிய தமிழ் வானொலிக் கலாசாரத்தில், குறிப்பாக பிரித்தானிய தமிழ் வானொலிக் கலாசாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ள லைக்காவின் ஆதவன் வானொலி, தமிழ் நேயர்களின் உச்சபட்ச அபிமான வானொலியாக உருவெடுத்துள்ளது.

தரமான, ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தகவல்கள், விரைவானதும் உண்மையானதுமான செய்திகள், அரசியல் கருத்தாடல்கள், சமகால நடப்புகள் குறித்த விவாதங்கள், அனைத்து வயதினரையும் ஆட்கொள்ளும் பாடல்களும், நிகழ்ச்சிப் படைப்புகளும் என நேயர்களின் ரசனைக்கு ஏற்ப விருந்தளிக்கும் நவீன வானொலிக் கலாசாரத்தை லைக்காவின் ஆதவன் வானொலி உருவாக்கியிருக்கிறது.

புலம்பெயர் தமிழ்ச் சூழலில் தமிழ் ஊடகப் பரப்பு பாரிய சவால்களுக்கு உட்பட்டு வரும் சூழலில், அந்த சவால்களையும், இக்கட்டுகளையும் தகர்த்தெறிந்து, ஆதவன் வானொலி உள்ளிட்ட ஆதவன் உடக வலையமைப்பை வெற்றிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்வதில் லைக்கா குழுமத்தின் நிறுவனர், தலைவர் – வியாபார வெற்றிகளின் நாயகன் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் வழங்கும் தலைமைத்துவத்திற்கும், ஆதரவுக்கும் நிகர் ஏதும் இல்லை. அவருக்கு உளமார்ந்த நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும்.

அடுத்து ஆதவன் வானொலியை, ஆதவன் ஊடக வலையமைப்பை முன்னோக்கி கொண்டு செல்வதற்ககும் மிகுந்த ஆதரவை வழங்கி வரும், பிரதித் தலைவர் பிரேம் சிவசாமிக்கும், உயர் முகாமைத்துவ சபைக்கும் – Chairman officeக்கும் எனது நன்றிகள்.

குறிப்பாக ஒரு வானொலியின் வெற்றியில், அதன் நிகழ்ச்சி முகாமையாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், விளம்பர உருவாக்குனர்கள், ஒலிப்பதிவாளர்கள், அறிவிப்பாளர்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர், செய்திப் பிரிவினர் ஆகியோரின் பங்கு மகத்தானவை. பொதுவாக இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் பணிபுரிவோர், அவ் ஊடக பணியை ஒரு வருமானத்திற்கான தொழிலாக கொள்ளாமல், அதனை விருப்புக்குரிய பணியாக, Passion ஆக கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்தப் பணியாளரும், நிறுவனமும் வெற்றி அடைய முடியும்.

ஆதவன் வானொலியில் பணியாற்றும் அனைவரும் தமது பணியை விருப்புக்கு உரியதாகவும், Passion ஆகவும் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் புதிய புதிய தேடல்களும், புதுமைகளை படைக்க வேண்டும் என்ற ஆர்வமும், படைப்பு திறமையும் (creative talents) ஆதவன் வானொலியை உச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.