பொதுவாகத் தடுப்பூசி என்றாலே நம் நினைவுக்கு வருவது வலியும் அந்த ஊசியும் தான். ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தோலில் தேய்க்கக்கூடிய ஒரு சாதாரண ‘கிரீம்’ (Skin Cream) மூலமாகவே தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்று அவர்கள் நிரூபித்துள்ளனர்.
முதலில் எலிகளிடம் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், தோலில் தடவப்பட்ட கிரீம் மூலமாகவே அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது கண்டறியப்பட்டது. தற்போது ‘ரணஜன்னி’ (Tetanus) போன்ற நோய்களுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி கிரீம்கள் சோதிக்கப்படுகின்றன. இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஊசி போடும் பயமே இருக்காது.






