April 20, 2026

நமது மூளையை சோம்பேறியாக்குகிறதா நவீன தொழில்நுட்பம்?

இன்றைய காலக்கட்டத்தில், மனிதர்களாகிய நாம் சிந்திப்பதற்கும், முடிவெடுப்பதற்கும் அதிகளவில் மென்பொருட்களையும் (AI) கணினிகளையும் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டோம். இது நமது மூளையின் சுயமான சிந்திக்கும் திறனைப் பாதிக்குமா என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இதைப் பற்றி மக்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சாரார், “அதிவேகமாக வேலைகளைச் செய்யத் தொழில்நுட்பம் இருக்கும்போது ஏன் நாம் கஷ்டப்பட வேண்டும்?” எனக் கேட்கிறார்கள். இன்னொரு சாராரோ, “இப்படியே போனால் மனித மூளை சிந்திப்பதையே நிறுத்திவிடும்” என்று கவலைப்படுகிறார்கள்.