February 12, 2026

லண்டனில் பாடசாலை ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல் – ஒருவர் கைது !!

வடமேற்கு லண்டனில் பாடசாலைசாலை ஒன்றில் இரண்டு மாணவர்கள் மீது காத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மசூதி ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரெண்டில் உள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, விசாரணையாளர்கள் 13 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவதும் சீரான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை பயங்கரவாத சம்பவம் என்று பொலிஸார் அறிவிக்கவில்லை.

ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் விடுத்துள்ள புதுப்பித்த அறிவிப்பில் தாக்குதல் நடத்திய மாணவன், குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என கூறியுள்ளனர்.