உலகத் தமிழர்களின் மனங்களை வெல்கிறது ஆதவன் வானொலி

athavan-radioஆதவன் தொலைக் காட்சி மற்றும் ஆதவன் செய்தித் தளம் ஆகியவற்றோடு செயற்பட்ட ஆதவன் ஊடகம் கடந்த வாரம் ஆதவன் வானொலியையும் தன்னோடு இணைத்திருக்கிறது.

இணைய வானொலியாக செயற்பட்ட ஆதவன் வானொலி இன்றுமுதல் செய்மதியிலும் இணைந்திருக்கிறது. Satellite 9A/ Freq 11766 , Vertical Symbol Rate 27500/ FEC3/4  என்ற அலைவரிசை ஊடாக இதனை நேயர்கள் கேட்டு மகிழ முடியும் என நிர்வாகத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.

அதேவேளை லைக்கா ரிவி எனும் TV Set Top Box  லும் ஆதவன் வானொலியைக் கேட்கும் ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களின் உலகு தழுவிய குரலாகவும் அவர்களின் இன்றைய தேவைகளை மனதில் கொண்ட ஒன்றாகவும்  ஆதவன் வானொலியின்  நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இசையும் செய்திகளுமாக தற்போது ஒலித்துவரும் ஆதவன் வானொலி பல்லாயிரக் கணக்கான நேயர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது.

player

உலகெங்கும் உள்ள தமிழர்களின் செய்தித் தேடலில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கான மாற்று ஊடகமாக ஆதவன் வானொலி தன்னை பரிமாணப் படுத்தி வருகிறது என்பது சுட்டிக் காட்டத்தக்கது.

இங்கிலாந்து தமிழ் நேயர்களுக்காக ஆதவன் வானொலி மிக விரைவில் DAB வழியாக ஒலிபரப்பப் படவிருப்பது, வானொலி நேயர்களுக்கு மகிழ்ச்சி தரும் மற்றுமொரு அம்சமாக அமையவிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.